பாங்காக்கில் உள்ள சொகுசு வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!! மூவர் பலி
தாய்லாந்தில், பாங்காக்கில் உள்ள சொகுசு வணிக வளாகத்தில் இன்று பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது.
துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்களில் வெளிநாட்டவரும் ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





