ஜெர்மனி குடியுரிமை கொண்ட வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
ஜெர்மனியில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஜெர்மனி நாட்டில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான சர்ச்சை ஜெர்மனி நாட்டில் தொர்ந்து கொண்டு இருக்கின்றது.
ஜெர்மனியில் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் AFD என்று சொல்லப்படுகன்ற ஜெர்மனியின் பிரதான வலதுசாரி தீவிரவாத கட்சியானது ஜெர்மனியில் வாழுகின்ற வெளிநாட்வர்களை குறிப்பாக வெளிநாட்டை பின்னணியாக கொண்டவர்களை கூட நாடு கடத்துவது பற்றி ஆலோசணை ஒன்று நடத்தி இருந்தது.
இந்த ஆலோசணை நடத்திய சம்பவம் தற்பொழுது ஜெர்மனியில் மிகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக ஜெர்மனியில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள பல கட்சிகள் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை புரிவதுடன் மேலும் பல பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் இந்த கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.