வாகனம் வாங்க விரும்புவோருக்கான அதிர்ச்சி தகவல்
வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் 50 வீத மேலதிக வரி நடைமுறையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் கீழ் இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த 50 வீத மேலதிக வரி தொடர்ந்தும் விதிக்கப்படும்.
வெளிநாட்டு செலாவணியை முகாமைத்துவம் செய்யும் நோக்குடன் இந்த வரி விதிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.




