கடல் மட்டம் உயரும் வேகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடல் மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதென ஐநா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
உலக வானிலை அமைப்பானது, கடந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை பல மாதங்களாக வானிலை தரவுகளை பகுப்பாய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கடந்த 8 ஆண்டுகளில், 2022ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருந்ததாகவும், கடல் மட்டத்தின் உயரும் வேகம் இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு உலகின் சராசரி வெப்பநிலையை விட 1.15 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்பட்டதாகவும், காலநிலை மாற்றம், உலகளாவிய கடல் வெப்பம், அண்டார்டிக் கடல் பனி மற்றும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்து வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, உலகெங்கிலும் பல நாடுகளில் வெள்ளம், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற பேரிடர்களின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும், வரும் காலங்களில் மிகவும் வெப்பநிலை உயர்வு மிகவும் மோசமடையும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது. மேலும் கடல் மட்டம் உயர்தல் மற்றும் கடும் வெப்பம் காரணமாக 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.