Twitter கணக்குகளில் நீலக் குறியீடுகளை மீளவும் பெற்ற பிரபலங்கள்
Twitter நிறுவனம் மாதத்திற்கு 8 டொலர் சந்தா செலுத்தாத கணக்குகளின் நீலநிறக் குறியீட்டை இவ்வாரம் வியாழக்கிழமை முதல் அகற்றப்பட்டமையால் பெருமளவில் சர்ச்சை எழுந்தது.
21ஆம் திகதி முதல் சில பிரபலங்கள், சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றின் Twitter கணக்குகளில் நீலக் குறியீடு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதற்காக அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பிரபல எழுத்தாளர் ஸ்டெஃபன் கிங் , பிரபலக் கூடைப்பந்து வீரர் லிப்ரான் ஜேம்ஸ் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அந்தப்பட்டியலில் அடங்குவர்.
கடந்த ஆண்டு வருவாய் ஈட்டுவதற்காக Twitter Blue அறிமுகப்படுத்தப்பட்டதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் (Elon Musk) கூறியிருந்தார்.
இதற்குமுன் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு Twitterஇல் நீலநிறக் குறியீடு பயன்படுத்தப்பட்டது.