பொழுதுபோக்கு

‘இயக்குனர் நாகா’ உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!!!

‘மர்மதேசம்’ சீரியல் இயக்குனர் நாகா உடல் நிலை குறித்து வெளியான வதந்தியை தொடர்ந்து, அதற்கு குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

மர்மதேசம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன், உள்ளிட்ட பல மர்ம தொடர்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நாகா, இவர் இயக்கிய சீரியல்கள் ஒவ்வொருமே 90ஸ் கிட்ஸின் பேவரட் தொடர்களாகும்.

இப்போது வரை இவருடைய படைப்புகளுக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் உள்ளது.

நாகா சீரியல் தொடர்களை, விறுவிறுப்பான கதைக்களத்தோடு காட்சியமைப்பதை கண்டு ஆச்சரியப்பட்ட பிரமாண்ட இயக்குனர் சங்கர், நாகாவுக்கு படம் இயக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வகையில் நாகா நடிகர் நந்தா மற்றும் சாயா சிங் நடித்த ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.

தொடர்ந்து பல சீரியல்களில் இயக்கி வந்ததாலும், ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றி வந்ததாலும் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது ஓடிடி நிறுவனம் ஒன்றிற்காக வெப் தொடர் ஒன்றை நாகா இயக்கி வந்தார்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இவர் மயங்கி விழுந்தார்,இதனால் அவ்விடத்தில் பெரும் பரபப்பு ஏற்பட்டது.

See the source image

இதை தொடர்ந்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இயக்குனர் நாகாவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. பின்னர் அவர் அபாய கட்டத்தை தாண்டி, தற்போது உடல் நலத்தோடு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென ஒரு சிலர், ‘மர்ம தேசம்’ சீரியல் இயக்குனர் நாகா மரணம் அடைந்து விட்டதாக, சமூக வலைதளத்தில் செய்தி பரவியது,

இதனால் நாகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என தெரிவித்துள்ள இவர்கள், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்