அமெரிக்காவில் Amazon நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட பெட்டியால் அதிர்ச்சி
அமெரிக்காவில் Amazon நிறுவனத்துக்கு நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பெட்டி ஒன்றில் பூனைக்குட்டி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பூனைக்குட்டி, யூட்டா மாநிலத்திலிருந்து கலிபோர்னியா வரை சுமார் 1,125 கிலோமீட்டர் பெட்டியில் பயணம் செய்திருக்கிறது
யூட்டா மாநிலத்தில் கேரி (Carrie) என்பவரின் வீட்டில் திடீரென கலீனா எனும் பூனைக்குட்டி மாயமாய் மறைந்துள்ளது.
வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கேரி தேடிய நிலையில் அக்கம்பக்கம், வட்டாரம் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. சுவரொட்டி அடித்து வீடு வீடாக ஒட்டினார். சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
7 நாட்கள் கழித்து Amazon நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. Amazon நிறுவனத்துக்கு கேரி திருப்பி அனுப்பவிருந்த பெட்டிக்குள் பூனைக்குட்டி சென்று ஒளிந்துகொண்டிருந்திருக்கிறது.
அதைப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றுவிட்டார்கள். பெட்டிக்குள் பூனைக்குட்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக Amazon ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பும் பெட்டிகளில் சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பொருள்கள் இருக்கும். ஆனால் இதுவரை உயிருள்ள ஒன்றைப் பார்த்ததில்லை என்றனர் அவர்கள்.
பூனைக்குட்டியின் உடலில் இருந்த சில்லை ஸ்கேன் செய்தவுடன் அதன் உரிமையாளர் கேரி என்பது தெரியவந்தது. 6 நாட்கள் உணவில்லை, தண்ணீரில்லை என்றபோதும் பத்திரமாக பூனைக்குட்டி இருந்தது.