ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – பொது மக்கள் மீது கத்திக்குத்து – நால்வர் காயம்

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மணி நேரத்திற்குள், விக்டோரியா பொலிஸாரால் பல இடங்களில் கத்தி தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இது பயங்கரவாத செயற்பாடு அல்ல என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து இனி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!