பல கோடி மதிப்புள்ள உணவகத்தை இழுத்து மூடும் ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான மோசடி வழக்குக்கு மத்தியில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் பாஸ்டியன் மூடப்படுவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார்.
இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஷில்பா ஷெட்டி மற்றும் உணவக உரிமையாளர் ரஞ்சித் பிந்த்ரா ஆகியோர் பாஸ்டியன் பாந்த்ராவின் இணை உரிமையாளர்கள். 2016 ஆம் ஆண்டில் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, மோசடி வழக்கில் சிக்கியதை அடுத்து ஷில்பா இந்த உணவகத்தை மூடுகிறார்.
ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக தீபக் கோத்தாரி என்ற நபர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தம்பதியரின் நிறுவனமான பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடையது. தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) இந்த வழக்கை விசாரித்து வருகிறது.