பாலிவூட்டின் “கிங்” சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் இத்தனை கோடிகளா?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.
50 வயதிலும் ஸ்மார்ட்டாகவும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கும் இவர், இன்று வரை தனது கேரியலில் முன்னிலையில் இருக்கின்றார்.
பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உலகளவில் உள்ளனர்.
துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை, மன்னத்தில் வீடு புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால், அவரது பிறந்தநாள் அலிபாக்கில் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கானின் ஆரம்பகால வாழ்க்கை 50 ரூபாயில் இருந்து தொடங்கியது. ஷாருக்கான் டிக்கெட் விற்பனையாளராகவும் வேலை செய்த ஒரு காலம் இருந்தது. நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களை நாற்காலியில் அமர வைக்கும் வேலை செய்து, அதற்காக 50 ரூபாய் சம்பளம் பெற்றார்.
ஷாருக்கானுக்கு முதலில் ‘சர்க்கஸ்’ என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து படிப்படியாக வளர்ந்து, பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து, இன்று 12,490 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.
ஹுருன் சமீபத்தில் நாட்டின் பணக்கார பிரபலங்களை பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த பட்டியலின்படி, அவரது சொத்து மதிப்பு 12,490 கோடியாக உள்ளது.






