ஷாருக் கானுடன் இணைய விக்னேஷ் சிவன் போடும் பலே திட்டம்

நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து புத்தொழில் நிறுவனம் தொடங்க விரும்புவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் ‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’ நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், இந்த புத்தொழில் மாநாட்டில் கலந்து கொண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எந்த தொழில் துவங்கினாலும் மனஉறுதி முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு புத்தொழில் நிறுவனங்களில் பணத்தை இழந்ததாகவும், ஒவ்வொரு அனுபவத்திலும் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒரு நபரை முற்றிலும் மறு உருவாக்கம் செய்துவிடாது என்றும், எதார்த்தமான நடிப்பு என்பது, மனிதர்கள் நடிக்கும் போதுதான் கிடைக்கும் என்றும் விக்னேஷ் சிவன் கூறினார். அப்போது நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து புத்தொழில் நிறுவனம் தொடங்க விரும்புவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.