சுறாக்களின் செயற்பாடு அதிகரிப்பு – ஆஸ்திரேலியாவில் மூடப்படும் கடற்கரைகள்!
ஆஸ்திரேலியாவில் ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீரின் தரம், மீன்கள் மற்றும் வேட்டையாடுபவர்களை ஈர்க்கும் கனமழை காரணமாக சுறாக்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலநிலை சார்ந்த வெப்பமயமாதல் கடலோரப் பகுதிகளில் சுறாக்கள் செலவிடும் நேரத்தை நீட்டிப்பதாகவும், மனிதர்களுடன் சந்திப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





