பொழுதுபோக்கு

அம்மாடியோவ்… இந்த டீ-சர்ட்டின் விலைய கேட்டாலே தலை சுற்றுதே….

ஜவான் பட நாயகன் ஷாருக்கான், விமான நிலையத்திற்கு அணிந்து வந்திருந்த ப்ளூ நிற ஹூடி டீ-சர்ட்டின் விலை விவரம் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷாருக்கான் அணிந்துவந்த ஹூடி டீசர்ட் ஹராட்ஸ் (Harrods) என்கிற நிறுவனத்தை சேர்ந்ததாம். இதன் விலையை இணையத்தில் தேடிப்பார்த்தால் 1094 அமெரிக்க டாலர்கள் என காட்டுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 89,000 ரூபாய். இதைப் பார்த்த ரசிகர்கள் சிம்பிளாக இருக்கும் இந்த டீ-சர்ட் இவ்ளோ காஸ்ட்லியா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது ஜவான் என்கிற ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பிரபல கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கி உள்ளார். இப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் அட்லீ. இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

ஜவான் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் கைவசம் டுங்கி என்கிற திரைப்படம் உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அண்மையில் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருந்த ஷாருக்கான் அங்கு நடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

பின்னர் ஓய்வெடுத்து அதிலிருந்து மீண்டுள்ள ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்திற்கு மனைவி கெளரி கான் மற்றும் மகன் ஆபிரஹாம் உடன் வந்த ஷாருக்கானின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

ஷாருக்கான் ஜீன்ஸ் பேண்ட்டும், ப்ளூ கலர் ஹூடி டீ சர்ட்டும் அணிந்து வந்திருந்தார். ஷாருக்கானின் இந்த உடை சிம்பிளாக இருந்தாலும் அதன் விலை தான் தலைசுற்ற வைக்கும் விதமாக உள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content