ஷாருக்கானை “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று கூறிய அதிகாரிகள்…
ஷாருக்கான் நேற்று தனது 60ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். ஷாருக்கானை பொறுத்தவரை ஒவ்வொரு பிறந்தநாளிலும் தன்னுடைய மன்னத் வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை ஷாருக்கான் வீட்டை விட்டு வெளியில் வரவும் இல்லை, ரசிகர்களை சந்திக்கவும் இல்லை.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில்,
“வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டேன். இதனால் எனக்காக வெளியில் காத்திருக்கும் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை. இதற்காக உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கூட்ட நெரிசல் பிரச்சினையை தவிர்ப்பதற்காகவும், உங்கள் அனைவரின் பாதுகாப்பு நலன் கருதியும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புரிதலுக்கும் என் மீதான உங்கள் நம்பிக்கைக்கும் நன்றி.

நீங்கள் என்னை பார்க்க முடியாமல் தவிப்பதை விட, உங்களை பார்க்க முடியாமல் போனது எனக்கு அதிக வருத்தம். உங்களை பார்த்து அன்பை பகிர்ந்துகொள்ள ஆவலாக இருந்தேன். லவ் யூ” என்று பதிவிட்டுள்ளார்.





