பொழுதுபோக்கு

பாலியல் புகார்… மோகன்லால் உட்பட 17 பேர் அடுத்தடுத்து இராஜினாமா

மலையால திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் கூண்டோடு இராஜினாமா செய்துள்ளனர்.

மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் சமீபத்தில் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மலையாள நடிகர்கள் மீதான பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க இன்று சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது மலையாள திரை உலகிரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!