வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் புயல் – நிலச்சரிவுகளால் வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைக் கடும் புயல் புரட்டிப்போடும் நிலையில், கனத்த மழை பெய்வதால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மூன்று நாட்களாக தொடரூம் நிலையில் பெருவெள்ளம். லாஸ் ஏஞ்சலிஸ் நகரவாசிகள் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது.

அங்கு சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் அளவு மழை கொட்டியது. முக்கிய விரைவுச்சாலைகளில் இடிபாடுகள் கிடப்பதால் சில கார்கள் சிக்கிக்கொண்டன.

பாதிக்கப்பட்ட பல பகுதிகள் சென்ற மாதம் காட்டுத்தீக்கு இரையாகின. அந்த இடங்களில் செடிகள் இல்லாததால் மண்ணைப் பிடித்துவைத்திருக்க எதுவும் இல்லை.

அதனால் நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கிறது. சாலைகளில் இடிபாடுகளை அகற்றும் பணி மும்முரமாய்த் தொடர்கிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!