சிலியில் கடுமையான பனிப்புயல் – 05 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!
சிலியில் (Chile) கடுமையான பனிப்புயலில் சிக்கி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 05 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோரஸ் டெல் பெய்ன் (Torres del Paine ) தேசிய பூங்காவில் இருந்து நேற்று குறித்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய பெண் ஒருவர், இரண்டு ஜெர்மன் குடிமக்கள் மற்றும் இரண்டு மெக்சிகன் குடிமக்கள் ஆகியோரின் உடல்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ஃபோன்ட் (Gabriel Boric Font) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு தூதரகங்களுடன் கலந்துரையாடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)





