பொழுதுபோக்கு

சூர்யா – ஜோதிகாவை கடுமையாக விமர்சித்து சவால் விட்ட பிரபல சீரியல் நடிகர்

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால், ‘கங்குவா’ தற்போது பல திரையரங்குகளில் காத்து வாங்கி கொண்டிருக்கிறது.

ஒரே வாரத்தில் பல தீயேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட கங்குவாவை, எப்படியும் கரை சேர்த்து விட வேண்டும் என பட குழு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

அதன் படி ரிலீஸ் ஆன பின்னர் இப்படத்தின் முன் பகுதியில் இடம்பெற்ற சில காட்சிகள் லென்த்தியாக இருப்பதாக ரசிகர்கள் சொன்ன பகுதியில் 12 நிமிடத்தை தூக்கி விட்டனர். அதே போல் இரைச்சல் அதிகமாக உள்ளது என கூறப்பட்ட இடங்களிலும், மீண்டும் பட்டி டிங்கரிங் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் படத்துக்கு முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து விட்டதால், இந்த படத்தை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது சாத்தியம் அற்றதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், பல இயக்குனர்கள், நடிகர்கள் இப்படம் குறித்து தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை கூறி கங்குவா படத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இயக்குனர் சுசீந்திரன், ‘கங்குவா’ திரைப்படம் அனைவரும் கொண்டாட கூடிய திரைப்படம். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்த திரைப்படம் கொண்டு சென்றுள்ளது. சூர்யாவின் நடிப்பு அபாரம். எனவே காலம் தாழ்த்தி இந்த படத்தை கொண்டாடாதீர்கள்… என்கிற கோரிக்கையோடு ‘கங்குவா’ படத்தை ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர் ரவியும் தன்னுடைய பங்குக்கு சூர்யா – ஜோதிகாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அண்மையில் அவர் பேசும்போது,

சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். தமிழ்நாட்டில் பிறந்து, வாழ்ந்த சூர்யா இங்கு தரமான கல்வி கிடைக்காது என்று, தன்னுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மும்பைக்கு போனதாக சூர்யாவும் – ஜோதிகாவும் சொல்றாங்க.

உங்க பிள்ளைகள் மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும். ஆனால், இங்கு இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா… உன் புருஷனுக்கு பொத்துட்டு வந்துடும் என ஜோதிகாவிடம் கேள்வி எழுப்புவது போல் பேசி உள்ளார்.

அதாவது சூர்யா ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததை இதில் சுட்டிக்காட்டி உள்ள சீரியல் நடிகர் ரவி, நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்… தொடர்ந்து செய்வோம்… சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம், உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ… சவால் சவால் விடுவது போல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்