ஆஸ்திரேலியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய செனட்டர் – அவை நடவடிக்கை இடைநிறுத்தம்!
ஆஸ்திரேலியாவின் செனட் சபை இன்று ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தீவிர வலதுசாரி செனட்டர் பவுலின் ஹான்சன் (Pauline Hanson) பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் சபைக்குள் முக மறைப்பை அகற்ற மறுத்துவிட்டமையால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றைய அமர்வில் இருந்து அவர் நாள் முழுவதும் விலக்கிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது செயல்களை அனைத்து கட்சிகளின் செனட்டர்களும் பரவலாகக் கண்டித்துள்ளனர். செனட்டர் பவுலின் ஹான்சனின் (Pauline Hanson) செயல் அவமறியாதைக்குரியது என பிற செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பெண்கள் தவறாக நடத்தப்படுவதை முன்னிலைப்படுத்தவே பர்தா அணிந்திருந்ததாக பவுலின் ஹான்சன் (Pauline Hanson) தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பல்வேறு தரப்பில் இருந்து பரவலான விமர்சனங்களை கொண்டுவந்துள்ளது.




