ரசிகர்களுடன் இந்தியன் 2 படம் பார்த்த கமல்… ரசிகர்கள் குஷி

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் படத்தினை இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன், நாசர் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளனர்.
படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ரிலீசான இந்தியன் 2 படத்தினை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து கமல்ஹாசனும் ஷங்கரும் படம் பார்த்தனர். இவர்கள் மட்டும் இல்லாமல் நடிகர் நாசரும் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தார்.
(Visited 13 times, 1 visits today)