யாழில் சுயமரியாதை நடைபவனி
யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான அனைத்து வகையான அடக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபயணம் இன்று (10) நடைபெற்றது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு. சுயமரியாதை வானவில் பெருமை – 2023 நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்´ என்பதை வலியுறுத்தும் முகமாக சுயமரியாதை நடைபயணம் நடைபெற்றது.
அத்துடன் LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
‘இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புள்ளவர்கள்’ என்று மதிக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையம் முன்னாலிருந்து இன்று (10) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக , பொது நூலகத்தை அடைந்து வைத்தியசாலை வீதி ஊடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.