இதயத்தில் அடைப்பு : இயக்குநர் வி. சேகர் காலமானார்
திரைப்பட இயக்குநர் வி. சேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார்.
இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
கவர்ச்சியான பாடல்கள், நடிகைகள் ஏதுமின்றி குடும்ப பாங்கான படங்களால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
இயக்குநர் வி. சேகரின் மறைவுக்கு ரசிகர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)




