குடும்பத்தினருடன் டெல்லி சென்ற நாகசைதன்யா யாரை சந்தித்துள்ளார் பாருங்க

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். இவர் நடிப்பில் நேற்று தண்டேல் திரைப்படம் வெளியானது.
சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாகசைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்நிலையில், நாக சைதன்யா அவரது படம் ரிலீசான நாளன்று குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உள்ளார்.
அதாவது, தனது காதல் மனைவி சோபிதா துலிபாலா அப்பா நாகார்ஜுனா மற்றும் அம்மா அமலா அக்கினேனி ஆகியோருடன் டெல்லிக்கு சென்று மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
(Visited 6 times, 1 visits today)