வங்கதேசத்தில் 24 மணி நேரத்தில் இரண்டாவது இந்து நபர் கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில், டாக்காவின்(Dhaka) புறநகர்ப் பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மளிகைக் கடை உரிமையாளரான மற்றொரு இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார்.
பலாஷ் உபாசிலாவைச் சேர்ந்த மணி சக்ரபோர்ட்டி(Mani Chakraborty), வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் முன் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் சரத் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திற்குத் திரும்புவதற்கு முன்பு தென் கொரியாவில்(South Korea) பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொலைக்கான காரணத்தை காவல்துறையினரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சந்தேக நபர்களைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குல்னா பிரிவில் உள்ள ஜஷோர் மாவட்டத்தில்(Jashore) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்து பத்திரிகையாளர் ராணா பிரதாப்(Rana Pratap) இறந்த அதே நாளில் சரத்தின் மரணம் நிகழ்ந்துள்ளது.
தொடர்புடைய செய்தி





