ஆஸ்திரேலியாவில் திடீரென இரத்தமாக மாறிய கடல் நீர் : குழப்பத்தில் ஆய்வாளர்கள்!
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் துறைமுகம் ஒன்றில் கடல் நீர் இளம் சிவப்பாக மாறியதை தொடர்ந்து குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய செல்வந்த புறநகர்ப் பகுதியான கிரிபில்லியில் உள்ள இவ்வாறு கடல் நீர் மாற்றமடைந்துள்ளது.
கடல் நீர் இவ்வாறு திடீரென மாற்றமடைந்தமை தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமும் (EPA) விசாரணைகளில் பங்கெடுத்துள்ளனர்.
கோட்பாடு அளவிலான பதில்களை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பிலுர்ஸ்ஸின் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.





