பூமியில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் – வெளிவரவுள்ள பல இரகசியங்கள்

ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் சமகால பூமியின் ஆழமான பாறைகளில் இன்று பாதுகாக்கப்பட்டிருப்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாரிய மோதலின் பின்னர் சந்திரன் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலுக்கு முன்னமே ஆதிப் பூமியின் அனைத்துத் தடயங்களும் அழிந்திருக்கும் என ஆய்வாளர்கள் நம்பியிருந்தனர்.
எனினும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் இன்றும் பூமியின் ஆழமான பாறைகளில் உள்ளமைக்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் பூமியின் மிகப் பழமையான பாறைகளை ஆய்வு செய்தபோது, பொட்டாசியம்-40 என்ற குறிப்பிட்ட ஐசோடோப்பு குறைந்த அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த இரசாயன முரண்பாடு காரணமாக ஏற்பட்ட மோதலில் சந்திரன் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலின்போது பாதிப்பின்றி தப்பிய, பழமையான ‘ஆதிப் பூமி மேலோட்டின்’ (Proto-Earth Mantle) எச்சமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கனடா, கிரீன்லாந்து மற்றும் ஹவாய் எரிமலைகளில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இந்த ஆதித் தடயங்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த ஐசோடோப்புப் பற்றாக்குறையானது, ஆதிப் பூமி இன்றும் நமது கிரகத்தின் ஆழத்தில் மறைந்திருப்பதை நிரூபிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆதிப் பூமியின் எச்சங்கள் மூலம் ஆரம்பகால பூமி மற்றும் அதன் அண்டை கிரகங்கள் எப்படி இருந்தன என்பதற்கான அரிய இரகசியங்களை கண்டுபிடிக்க முடியும் என MIT பேராசிரியர் நிகோல் நீ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.