இலங்கை

பாடசாலை உணவு திட்டம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை உணவுத் திட்டம் 2024 ஆம் ஆண்டளவில் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற “பாடசாலை உணவுத் திட்டத்தின்” முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவிக்கையில், 2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பாடசாலை மதிய உணவுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 204 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும்.

அதன்படி, அரசுப் பாடசாலைகளில் மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிதியமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அரசிதழ் தற்போது சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்