நைஜீரியாவில் பரீட்சையின் போது இடிந்து விழுந்த பாடசாலை – 21 பேர் பலி

நைஜீரியாவில் பாடசாலையில் இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் என்று தகவல் கூறுகிறது.
அந்தச் சம்பவம் ஜோஸ் நார்த் வட்டாரத்தின் செயின்ட் அகடமி (Saint Academy) பாடசாலையில் நடந்தது.
69 பேர் காயமுற்றனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மாணவர்களைக் காப்பாற்றும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
பாடசாலை எதனால் இடிந்து விழுந்தது என்பது தெரியவில்லை. அந்தப் பகுதியில் 3 நாளாகக் கனத்த மழை பெய்ததாகக் குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர்.
(Visited 19 times, 1 visits today)