ஜெருசலேமில் இடிக்கப்பட்ட ஐ.நா கட்டிடம் – சவுதி வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
கிழக்கு ஜெருசலேமில்(Jerusalem) உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமை(UNRWA) தலைமையக கட்டிடங்கள் இடிக்கப்பட்டதற்கு சவுதி வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச நிவாரண அமைப்புகளுக்கு எதிரான குற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “சகோதர பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்கு சவுதி அரேபியா தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
சவுதி அரேபியா பாலஸ்தீன உரிமைகளை பல வருடங்களாக ஆதரித்து வருகிறது, மேலும் 1967ல் கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீன பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்தி




