இலங்கையர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்… ஜீ தமிழ் மேடையில் சபேசனுக்கு நடந்தது என்ன?
ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் முதல் பைனலிஸ்ட்டாக சுசந்திகா தெரிவுசெய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து அந்த கதிரையில் அமர கடுமையான போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் பைனலிஸ் தெரிவுக்குப்பின் வந்த வாரம் நால்வர் கோல்டன் பர்வோமன்ஸ் பெற்றாலும் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை.
கடந்த வாரம் தீபாவளி என்பதால் பைனலிஸ்ட் தெரிவு இடம்பெறாவில்லை. ஆனால் இந்த வாரம் நிச்சயமாக பைனலிஸ்ட் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.
இந்த வாரம் டூயட் பாடல்கள் வாரம். அதாவது நமது சரிகமப கடந்த சீசன்களில் தமது திறமையை வெளிக்காட்டிய போட்டியாளர்களுடன் சேர்ந்து சீசன் 5 போட்டியாளர்கள் பாடி வருகின்றார்கள்.
இதில், இனியா “வளையோசை” பாடலை பாடி அசத்தியுள்ளார்.
அடுத்ததாக ஸ்ரீஹரி, சரிகமப லிட்டில் சாம் ரன்னர்அப் யோகஸ்ரீயுடன் இணைந்து பாடலை பாடியுள்ளார்.
ஷிவானியும் ஐயோ பத்திக்கிச்சி பாடலை அருமையாக பாடி நடுவர்களை அசத்திய புரோமோக்கள் எல்லாம் வெளியாகின.
அந்த வகையில் இலங்கையர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த சபேசனின் பாடல் புரோமோ இன்று வெளியாகி உள்ளது.
இதில் “சரிகமப லிட்டில் சம்ப்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று, இறுதிப் போட்டிக்கு முதல் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிக்ஷிதாவுடன்தான் நம்ம சபேசன் டூயட் பாடலை பாடியுள்ளார்.
“ஆருயிரே ஆருயிரே…” என்ற பாடலை இருவரும் இணைந்து பாடி அனைவரையும் எழுந்துநிற்க வைத்துவிட்டார்கள்.
அதிலும் ரிக்ஷிதாவின் குரலை கேட்டு நடுவர் ஸ்வேதா பாராட்டு மழையை பொழிந்தார்.
மேலும் சபேசனின் பர்வோமன்ஸைப் பார்த்து “இறுதிபோட்டியாளராவதற்கு அனைத்து திறமைகளும் உனக்கு உண்டு” என ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இந்த முறையும் சபேசனுக்கு கோல்டன் பர்வோமன்ஸ் வழங்கப்பட்டது. ஆக சபேசன் இறுதிப்போட்டியாளராக வருவது 99 வீதம் உறுதியாகிவிட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம்.
இனி அனைத்தும் நடுவர்கள் கைகளில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் சபேசனுக்கு என்ன நடக்கப்போகின்றது என்று…





