சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் புதிய லுக்… அடுத்த சம்பவம் லோடிங்…

சரவணா ஸ்டோர்ஸ் சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான சரவணன் அண்ணாச்சி தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய இரண்டாவது படம்.
ஏற்கனவே தி லெஜன்ட் படத்தை தயாரித்து இருந்த அவருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதை தொடர்ந்து ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
இதில் ஹீரோயின் ஆக பாயல் ராஜ்புட் நடிக்கிறார். இது தவிர ஷாம், அண்ட்ரியா என முக்கிய பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே படத்தின் பூஜை போட்டோக்களுடன் அறிவிப்பும் வெளியானது. அதை அடுத்து தற்போது லெஜெண்ட் அண்ணாச்சி புது லுக்கில் இருக்கும் போட்டோக்களை ரிலீஸ் செய்துள்ளார்.
அது மட்டும் இன்றி சுவாரஸ்யமான அப்டேட் வரப்போகிறது என தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நிச்சயம் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசராக தான் இருக்கும் என்கின்றனர்.
மேலும் இந்த வருட கோடை விடுமுறைக்கு படம் வெளியாக இருந்தது. ஆனால் ஷூட்டிங் வேலைகள் முடியாத நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டு இருக்கிறது.
அதற்கு முன்பாக அண்ணாச்சி ஒவ்வொரு அப்டேட்டையும் தீயாக இறக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறாராம்.