பொழுதுபோக்கு

சூர்யா…, விஜய் சேதுபதி… கமல் இடத்தை Replace செய்யப்போவது யார் தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அதேபோல் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் மலையாளத்தில் மோகன் லாலும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தென்னிந்திய மொழிகளில் மற்றவற்றை காட்டிலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம்.

மக்களின் குரலாக அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை போட்டியாளர்களிடம் பட்டென கேட்டுவிடுவார். அப்படி இருந்த கமல், கடந்த சீசனில் எடுத்த சில முடிவுகள் தவறாகி அது அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தின.

இதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்தார். சினிமாவில் பிசியாக உள்ளதால் பிக்பாஸுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்திருந்தார் கமல். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரது கேள்வியாக இருந்தது, யார் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் என்பது தான்.

கடந்த சில நாட்களாக நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் சோசியல் மீடியாவில் அடிபட்டன. ஆனால் அதெல்லாம் வதந்தி என பின்னர் தெரியவந்தது.

லேட்டஸ்ட் தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் தொகுப்பாளராக நடிகர் சரத்குமார் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். அது உறுதியானால் மீண்டும் நாட்டாமை மோடுக்கு மாறிவிடுவார் சரத்குமார்.

(Visited 31 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!