இலங்கை செய்தி

இலங்கையில் நடந்த போர் குறித்து சரத் வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் பலி

இந்த நாட்டில் எவ்வாறான யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டின் போதும் இலங்கைப் படைகள் போர்க்குற்றம் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இது அமையவுள்ளதுஇ

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும் எனவும் முதலீட்டு வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இங்கு பௌதீக பாதுகாப்பு மட்டுமன்றி பொருளாதார பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என்பனவும் முக்கியமானவை என சரத் வீரசேகர தெரிவித்தார்.

கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும், முப்பது வருடகால யுத்தத்தில் 29,000 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டில் நடப்பது சர்வதேசம் அல்லாத ஆயுதப் போராட்டம் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

எனவே, நாட்டில் எவ்வாறான யுத்தம் இடம்பெற்று வருகின்றது என்பதை விளக்கி எமது குழு அறிக்கை தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் குழுவிடம் உண்மை நிலையை விளக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை