நடிகர் சஞ்சை தத் இப்படிப்பட்டவரா? பிரபல நடிகை ஓபன்…

நடிகை அமீஷா படேல் தனது திரைப்பயணத்தின் 25 ஆண்டுகளை சமீபத்தில் நிறைவு செய்தார். இதையொட்டி அவரது முதல் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
சமீபத்திய பேட்டியொன்றில், நடிகர் சஞ்சய் தத்துடனான தனது நெருக்கமான நட்பு குறித்து அமீஷா மனம் திறந்து பேசினார்.
சஞ்சய் தத் தன்னை மிகவும் பாதுகாப்பாகவும் அக்கறையுடனும் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
சஞ்சய் தத்தின் வீட்டிற்கு செல்லும் போது ஷார்ட்ஸ் அல்லது மேற்கத்திய உடைகளை அணிய அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
சஞ்சய் தத் தனது வீட்டிற்கு வரும்பொழுது எப்போதும் பாரம்பரிய உடைகளான சல்வார் கமீஸ் அணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் சினிமாத்துறைக்கு ரொம்ப அப்பாவிங்கறதுனால, சரியான ஆள கண்டுபிடிச்சு, என் கல்யாணத்துல என்னை மணமேடை வரை அழைத்து சென்று கண்ணியதானம் செய்து வைப்பேன்” என்றும் சஞ்சய் தத் கூறியதாக அமீஷா தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளில் சஞ்சய் தத் கேக் ஊட்டுவது போன்ற ஒரு பழைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சல்வார் கமீஸ் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டி, “அவர் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்துவார். நான் எப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி மெசேஜ் அனுப்பி விசாரித்துக் கொண்டிருப்பார்.” என்று அமீஷா படேல் கூறியுள்ளார்.
அமீஷா சமீப வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார், கடைசியாக சன்னி தியோலுடன் காடர் 2 (2023) படத்தில் பெரிய திரையில் தோன்றினார்.