300 கோடி வசூலித்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘சங்கராந்திகி வஸ்துனம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை இயக்கியவர் அனில் ரவிபுடி. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான படம் ‘சங்கராந்திகி வஸ்துனம்’.
தெலுங்கில் உருவான இப்படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, VTV கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்துக்கு பீம்ஸ் சிசிலேரியோ இசையமைத்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் படத்தை தயாரித்தது.
படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பேமிலி என்டர்டெயினர் மற்றும் காமெடி கதைக்களத்தால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து பலரும் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் வரும் மார்ச் 1-ம் தேதி ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதையடுத்து அதே நாளில் ஜீ5 ஓடிடியில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.