சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்? பிரபலம் கூறுவது என்ன?
சமந்தா – நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
அதற்கு காரணமாக பல்வேறு யூகங்கள் சொல்லப்பட்டன. சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
அவர்களது திருமணம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.
நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு சமந்தாவின் கரியர் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு அரிய நோயான மையோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று அந்த நோயிலிருந்து மீண்டார்.
அதனையடுத்து இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸில் நடித்தார அவர். அதில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அவரது ரீ என்ட்ரி அவரது ரசிகர்களுக்கும், அவருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. அதேசமயம் சமந்தாவின் வாழ்க்கையில் இன்னொரு சோகமான நிகழ்வும் சமீபத்தில் நடந்தது. அதாவது அவரது தந்தையான ஜோசப் பிரபு சமீபத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் பேசிய அவர் “சமந்தாவின் வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு சோகம் நடந்தது. அவரது தந்தை உயிரிழந்துதான் அது. அவர் இறந்த பிறகு சமந்தாவின் தாயும், சகோதரர்களும் வீட்டில் அமர்ந்து பேசினார்கள். அப்போது சமந்தா இனி இப்படி தனியாகவே இருக்கக்கூடாது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி தங்களது உறவினர் வட்டத்திலேயே அவருக்கு ஒரு பையனையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்
சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்திருந்தார். அதில் 2025ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள் இருந்தன. மேலும் அவற்றில் உங்களுக்கு நம்பிக்கையான அன்பான துணை கிடைப்பார் என்று இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்களோ அடுத்த வருடம் தனக்கு திருமணம் என்பதைத்தான் சமந்தா மறைமுகமாக கூறியிருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் சில மாதங்களுக்கு முன்பு ரசிகரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த சாம், தனக்கு இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. முதல் திருமணத்தில் நடக்கும் விவாகரத்துகளைவிடவும் இரண்டாவது திருமணத்தில் நடக்கும் விவாகரத்துகள்தான் அதிகம் என்று புள்ளிவிவரம் கூறுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.