தெலுங்கு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தார் சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பாணா காத்தாடி படத்தில் நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார்.
தமிழில் சமீபகாலமாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லாம தெலுங்கு, இந்தி பக்கம் சென்று நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்து ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
அறிக்கை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுக்காப்பான பணிச்சூழல் அமையும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளமை தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
(Visited 10 times, 1 visits today)