பொழுதுபோக்கு

மனைவியை கணவன் விட்டுச் செல்வது ஏன்? சமந்தா லைக் செய்த சர்ச்சைப் பதிவு

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் பெரிதும் படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் கூட, ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில், நடிகை சமந்தா லைக் செய்துள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக்சஸ்வெர்ஸ் என்கிற இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ, ‘டைரி ஆஃப் எ சிஇஒ’ என்ற Youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ஒரு பகுதியை பகிர்ந்துகொண்டது.

அந்த வீடியோவில் ‘ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டு செல்வது ஏன்? உறவுகள் கைவிடுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது போன்ற விஷயங்கள் பேசப்படுகிறது.

இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், “624% சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தங்களது நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்” என்கிற புள்ளி விவரத்தை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் 60 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை நடிகை சமந்தாவும் லைக் செய்திருக்கிறார். ஆனால், மற்றபடி வேறு எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!