பொழுதுபோக்கு

சமந்தாவுக்கு மற்றுமொரு கொடிய நோய்… தனியாக போராடும் பெண் சிங்கம்

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மயோசிட்டிஸ் மட்டுமில்லாமல், புது நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், இதற்காக மருத்துவமனைக்கு என்னை அழைத்து செல்லக்கூட யாரும் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி கோவாவில் மிகவும் கோலாகலமாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடிகளாக இருந்த இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, சமந்தா முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, நாக சைதன்யாவின் குடும்ப பெயரை நீக்கினார்.

இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு சமந்தா அதீத கவர்ச்சியாகவும் கிளாமராகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா, ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், Galatta Indiaக்கு பேட்டி அளித்துள்ளார். இதில், இந்த தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் எனக்கு மயோசிடிஸ் இருப்பது தெரியவந்தது.

இது மட்டுமில்லாமல் ஞாபக மறதி நோயும் இதனுடன் சேர்ந்து கொண்டது. இதனால், படப்பிடிப்பில் என்ன நடக்கிறது, சிலரின் பெயரைக்கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டேன்.

யாரும் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை, படப்பிடிப்பில் கூட யாரும் என்னிடம் நலன் விசாரிக்கவில்லை. இந்த நோய் ஏற்பட்டது முதல், இன்று வரை எல்லா டிரீட்மென்ட்டுக்கும் நானே தனியாகவே போய் வருகிறேன்.

மயோசிடிஸ் நோய் இருந்தால், குழப்பம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல் ஆகிவை இருக்கும் என்று கூறினார்கள், அவற்றுடன் தினமும் தனிமையில் அவதிப்பட்டு வருகிறேன்.

மேலும், இந்த தொடரில் பல ஆக்சன் காட்சிகள் இருந்ததால், என்னால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு சந்தேகம் வந்தது இதனால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று இயக்குனர் ராஜ் மற்றும் டிகே ஆகியோரிடம் கூறினேன்.

எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகைகளையும் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை,என் மீது மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்ததால்,மிகவும் சிரமப்பட்டு இந்த ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன் என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள், புகழின் உச்சியில் இருக்கும் சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என வருத்தப்பட்டு, இவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

(Visited 36 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!