மீண்டும் அட்லீயுடன் இணையும் சமந்தா… ஆனால் அது இல்ல…

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா இப்போது ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அட்லீ படத்தில் சமந்தா நடிப்பது குறித்து பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” அட்லீயும் நானும் நல்ல நண்பர்கள். வருங்காலத்தில் நானும் அவரும் இணைந்து பணியாற்றுவோம். ஆனால், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)