பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் சல்மான் கான் – அதிர்ச்சி செய்தி
பாலிவுட் நடிகர் சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவூட்டில் கோலோச்சி வரும் சல்மான் கான் ஒரு பயங்கரவாதி என அவருக்கு முத்திரை குத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.
அண்மையில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், இந்தி திரைப்படங்கள் சவூதியில் திரையிட்டால் பெரிய அளவில் ஹிட் அடிப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களும் பல கோடிகள் வசூலிப்பதாகவும் கூறினார்.
மேலும் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இங்கே இருப்பதே அதற்கு காரணம் என பேசியிருந்தார். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பலுசிஸ்தானை ஒரு நாடு போல் சல்மான்கான் கூறியது பாகிஸ்தானை எரிச்சலடைய செய்துள்ளதாக தெரிகிறது.
சல்மானின் கருத்து பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாக உள்ளதாக கூறி அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் சல்மானை நபரை தீவிரமாக கண்காணிப்பது, அவர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும்.




