அமரன் படத்தில் சாய் பல்லவி யார் தெரியுமா? வெளியானது வீடியோ

மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, ‘அமரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடித்துள்ளார்.
சிவா நடிப்பில்… ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முதல் முறையாக ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன், தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துளளார். முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்துளளார். தற்போது இவருடைய கதாபாத்திரத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
(Visited 11 times, 1 visits today)