திடீரென அந்த படத்தில் நடிக்கும் சாய் பல்லவி… அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். இதற்குப் பிறகு பல தெலுங்கு படங்களிலும் அறிமுகமாகி தெலுங்கு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார்.
ஒரு நடிகை என்றால் நிச்சயம் நெகட்டிவ் விமர்சனம் இருக்கும் ஆனால் சாய் பல்லவிக்கு மட்டும்தான் சினிமாவில் இதுவரையிலும் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் விமர்சனம் என்பதே கிடையாது.
அந்த அளவிற்கு தன் உடையிலும், நடத்தையிலும் கவனம் செலுத்தி வரும் ஒரே நடிகை சாய் பல்லவி மட்டுமே.
தன்னடக்கமும், கலாச்சாரத்தையும் பின்பற்றும் சாய் பல்லவிக்கு குடும்ப கதாபாத்திரங்களும் வரத் தொடங்கியது.
இந்நிலையில் ஒரு மாற்றத்திற்காக திடீரென பாலிவுட்டுக்குத் தாவினார் சாய்பல்லவி. #EKdin என்ற திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கதாநாயகனாக ஜூனைத் கான் என்பவர் நடிக்கிறார். இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 7- ஆம் தேதி திரையில் வர இருக்கிறது.