அடுத்தடுத்து படங்களை தட்டிதூக்கிய சாய் அபயங்கர்

2025-ல் கோலிவுட்டில் மிகவும் பிசியான இசையமைப்பாளர் என்றால் அது சாய் அபயங்கர் தான். அவர் இசையமைப்பில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை ஆனால் அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி ஜோடியின் ஒரே மகன் தான் இந்த சாய் அபயங்கர்.
இவர் ஆசை கூட, கச்சி சேர போன்ற ஆல்பம் பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த ஆல்பம் பாடல்கள் தான் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது.
இவர் இசையமைப்பாளர் அனிருத்திடமும் புரோகிராமராக பணியாற்றி இருக்கிறார். தேவரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி போன்ற படங்களிலும் அனிருத் குழுவில் இணைந்து பணியாற்றி இருக்கிறார் சாய் அபயங்கர்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கைவசம் தற்போது பென்ஸ் திரைப்படம் உள்ளது.
இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்திற்கு சாய் தான் இசையமைக்கிறார்.
இதுதவிர பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரும் டியூடு திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசை.
சாய் அபயங்கர் கைவசம் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் உள்ளது. அதுதான் அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் சுமார் 700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சாய் தான் இசையமைக்கிறார்.
மேலும் சிம்பு – பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு இசையமைப்பாளராக கமிட் ஆனார் சாய் அபயங்கர்.
சாய் அபயங்கரின் கைவசம் தற்போது லேட்டஸ்டாக வந்துள்ள படம் தான் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.24 திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்க உள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.