ஜீ தமிழ் மூன்றாவது பைனலிஸ்ட்டாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கைத் தமிழன் சபேசன்
ஜீ தமிழ் சரிகமப வில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அடுத்த பைனலிஸ்ட் அறிவிக்கப்பட்டார்.
அவர் வேறு யாரும் இல்லை, நம் இலங்கைத் தமிழன் சபேசன் தான்.
சபேசன் மற்றும் பவித்தாவுக்கு இடையில் போட்டிகள் கடுமையாக இருந்தது. இதில் சபேசன் மூன்றாவது பைனலிஸ்ட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபேசன் இராவணன் படத்திலிருந்து கார்த்திக் பாடிய உசுரே போகுதே.. உசுரே போகுதே.. என்ற பாடலை பாடினார்.
ஒரிஜினல் பாடகருக்கு முன்பே சற்றும் பயமில்லாமல் சபேசன் பாடிய பாடலைக்கேட்டு அரங்கமே எழுந்து நின்றது.
பாடகர் கார்த்திக் அவரது கதிரையில் இருந்து இறங்கிஓடி வந்து சபேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், அவருக்கு இன்னொரு ஸ்டார் கொடுத்தார்.
அடுத்ததாக இருவரும் சேர்ந்து உசுரே போகுது பாடலை அட்டகாசமாக பாடியுள்ளனர்.
இதன்போது தனது அம்மாவிடம், அம்மா ஜெய்த்து விட்டேன். இது போதுமா? என கேட்டார்.
இதையடுத்து அக்காவின் ஸ்தானத்தில் இருந்து, சபேசனை அந்த கதிரையில் அமர வைத்தார் பவித்ரா.
இலங்கைத்தமிழர்கள் உட்பட உலகத்தமிழர்கள் அனைவரினதும் வாழ்த்துக்கள் சபேசனுக்கு உரித்தாகட்டும்.





