“இதனால் தான் பிரேக்கப் ஆனது” அதிர்ச்சி காரணத்தை கூறிய சானியா

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சானியா ஐயப்பன். குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது கதாநாயகியாக மாறியுள்ள இவர் குயீன், பிரேதம், லூசிபர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
தமிழில் இறுகப்பற்று, சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஒரு நபருடன் காதலில் விழுந்திருந்தார். அது குறித்த வெளியான செய்திகளையும் அவர் மறக்கவில்லை.
அதேசமயம் திடீரென தனது காதல் பிரேக் அப் ஆகிவிட்டது என்று ஒரு அதிர்ச்சி தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறினார் சானியா ஐயப்பன்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக தனது காதல் பிரேக் அப் ஆனது என்கிற ஒரு காரணத்தை கூறியுள்ளார்.
“நான் காதலித்த அந்த நபர் எப்போது பார்த்தாலும் என்னிடம் சினிமா துறையில் பணிபுரியும் பெண்களுக்கு எப்போதுமே நல்ல வாழ்க்கை துணை அமைய மாட்டார்கள் என்றும், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றுமே தொடர்ந்து கூறி வந்தார்.
நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவருடைய வாயிலிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்பது கொடுமையானது. மேலும் நான் பார்க்கும் தொழிலை இழிவாக பேசுவதையும் என்னால் ஏற்க முடியவில்லை.
அதனாலயே எங்கள் காதல் பிரேக்கப் ஆனது. இந்த மனக்கஷ்டத்திலிருந்து வெளியே வர ரொம்பவே சிரமப்பட்டேன். இப்போது நார்மல் ஆகி விட்டேன்” என்று கூறியுள்ளார் சானியா ஐயப்பன்.