அனுமதியின்றி நேட்டோ எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்களால் பரபரப்பு!
எஸ்தோனியா (Estonia) எல்லைக்குள் மூன்று ரஷ்ய எல்லைக் காவலர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. (எஸ்தோனியா நேட்டோ உறுப்புரிமையை கொண்ட நாடாகும்)
குறித்த மூவரும் இன்று நர்வா (Narva River) நதி வழியாக உள்ளே நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ரஷ்ய தூதரை அழைக்க திட்டமிட்டுள்ளதாக எஸ்தோனிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் பணியாளர் பிரச்சினை குறித்து எஸ்தோனிய உள்துறை அமைச்சர் இகோர் டாரோ (Igor Tar) கவலை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ரஷ்ய காவலர்கள் உடனடியாக தங்கள் பகுதிக்கு திரும்பியதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் எஸ்தோனியா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனை தொடர்ந்து ரஷ்யா பிற ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்கும் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரஷ்ய வீரர்களின் குறித்த செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





