உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு
தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஷியா பகுதியில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய பத்திரிகையாளர் போரிஸ் மக்சுடோவ் உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய அரசு தொலைக்காட்சியான Rossiya 24 இல் பணிபுரிந்த Maksudov, புதன்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது நிலையான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் மாஸ்கோ தனது முழுப் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் மக்சுடோவ் தவிர குறைந்தது 15 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.





