02 மாத குழந்தையை பனியில் வீசிய ரஷ்ய பிரஜை : நாடு கடத்த உத்தரவு!
ரஷ்ய செல்வாக்கு மிக்க நபர் தனது குழந்தையை பனிச்சரிவில் வீசுவது போன்ற காணொளி வெளியாகி வைரலாகியதை தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
46.5 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட மிஸ்டர் தேங்க் யூ என்று அழைக்கப்படும் செர்ஜி கோசென்கோவுக்கு எதிராக ரஷ்யாவின் பாஸ்மன்னி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
“குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையை தன்னிடமிருந்தும் மேல்நோக்கியும் தூக்கி எறிந்தார், இதனால் அவர் உயரத்திலிருந்து விழ முடிந்தது. பனியின் அடுக்கு குறைவாக இருந்தமையால் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை என ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள குறித்த நபரை ரஷ்யாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளதுடன், அவர் ரஷ்ய மண்ணுக்கு வந்த தருணத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு அவரை காவலில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.