நட்பு நாடுகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க தயாராகும் ரஷ்யா!
நட்பு நாடுகளுக்கு 24 மணிநேரம் மின்சாரம் வழங்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
ஒரு மிதக்கும் அணுமின் நிலையத்தின் தொழில்நுட்பத்தை “நட்பு நாடுகளுடன்” மட்டுமே ரஷ்யா பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்குவதற்கு உதவும் என்றும் கிரெம்ளின்- எரிசக்தி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
இத்திட்டம் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் கார்பன் பாதிப்புகளை குறைத்துள்ளதாகவும் கழிவுகள் விதிமுறைகளின்படி அகற்றப்படுவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
மிகவும் குளிர்ச்சியான சைபீரிய பிராந்தியத்தில் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா நிறுவியுள்ளதாக அந்த இடத்தை பார்வையிட்ட முகமையின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)